My brother Venkatesan Subbarayan took me to Singapore, Cambodia and Indonesia on a 11 day tour from 16 Dec-26 Dec, 2019. It was a great trip. In order to express my feelings and observations, I write this post in Tamil with photos. Feel free to comment on anything, text, photos, narration, layout, format etc.to improve the write-up.Thanks in advance my dear viewers.
![]() |
ஆங்கர் வாட் கோயில் - உச்சிக் கோபுரத்தின் ஒருபகுதி ! |
என் சகோ.வெங்கடேசனுடன் சென்ற கம்போடிய, இந்தோனேசியப் பயணக் கட்டுரை ! கம்போடியா 17-20 டிசம்பர் 2019
சிங்கப்பூர் - 17. 12. 19
எங்கள் குடும்ப நண்பர் செல்வமுத்துக்குமார் அவர்கள் வீட்டிலிருந்து கம்போடியா போக உலகப்புகழ் சிங்கப்பூர் சாங்கி ஏர்போர்ட்டிற்குள் நுழைந்தோம். முன்பு போல விமானத்தில் ஏற இங்கு போடிங் பாஸ் வாங்க லைனில் நிற்க வேண்டாம். ஏடிஎம் மிசின் கணக்கா இருந்த எலக்ட்ரானிக் டப்பாவுக்குள் பாஸ்போர்ட் காம்ச்சோடனே ஸ்க்ரீன்ல யப்பா பேரோட ஏம் பேரும் வந்தது. சில நொடிகளில் விமானத்தில் இருக்கை எண் போட்டு போடிங் பாஸ் வந்தது. (இன்னொரு நாட்டு மிசின்ல நம்ம பேரு வந்துதுன்ட்டு செம கெத்துல உள்ள போனா ரெண்டு கையாலயும் கைநாட்டு வைக்க சொல்லி அசிங்கப்படுத்திட்டாங்ஙெ... சரின்ட்டு வந்துட்டேன்),
ஏதோ லவுஞ்சாம்.. இந்த கடன் அட்ட வச்சிருக்கறவங்க உள்ள எலவசமா போலாமாம்.. ( போடிங் பாஸ் வாங்கிட்டுப் போவணும் ) அண்ணாச்சி கூப்டுட்டுப் போய்ட்டார். உள்ள நொழயறப்வே அந்த ரிசப்ஷன் தங்கச்சிங்க சொல்லி சொல்லி அனுப்பிச்சிது "யோவ். இனும ஃப்ளைட் கெளம்பற நேரம்லாம் சொல்ல மாட்டோம். மைக்ல அனௌன்ஸ் பண்ற மைக்கேல் தம்பி ரிசைன் பண்ணி போய்ட்டுது - உனக்கா பொறுப்பு இருந்தா வண்டியப் பாத்து ஏறிக்கன்னு... அப்ப மண்டய மண்டய ஆட்டிட்டு உள்ள போய்ட்டோம்.... அங்க இருக்கற எது வேணா எவ்ளோ வேணா சாப்டுக்கலாமாம்.. குடிச்சிக்கலாமாம்... இதுவரைக்கும் பாக்காத ஐட்டம்லாம் ஒரு கட்டு கட்ட முடிவு பண்ணிட்டுப் போனா கறி, மீன் பக்கத்ல மைனாரிட்டாயா சைவ சாலட் சாராயம், சாட்டே, பம்பரம்னு தினுசு தினுசா.. சைவத்துல ஆனது எதயும் உட்டு வக்கில... கடிச்சிட்டு, குடிச்சிட்டு மொள்ள கெளம்பி பெராக்கு பாத்துகிட்டே போனோம் (போனேன்).. பின்ன ங்கிலீஷ் சாராயத்துக்கு செம படம், செட், லைட் போட்டு 2 பொண்ணுங்கள நிக்க வச்சி சிரிக்க சொன்னா பராக்கு பாக்காம என்ன செய்வேன்? ஆடி அசஞ்சி போடிங் கேட்குள்ள போனா அங்க ஒரு பெருசு கிரிக்கட் அம்பயர் Wide பாலுக்கு சிக்னல் குடுக்கற மாதிரி கைய ஆட்டி..'மூடிட்டாங்க.. நீ வண்டி ஏற முடியாது'ன்னிச்சி அர லிட்டர் அட்ரினல் சொறந்து முதுவெல்லாம் நனஞ்சி போச்சி.... நல்ல வேள பின்னாடி ஒரு பாப்பா நின்னு உட்டுத் தொலன்னு கையக் காட்டுச்சி... வண்டிய உடுறது பெரிய விஷயமில்ல... அடுத்த நாட்டுக்குப் போறேன்ட்டு போடிங் பாஸ வாங்கிட்டு போவாட்டி உட்டா பெருங் குத்தமாம்.. பின்னங்காலு பின் வழுக்கைத் தலயில தெறிக்க ஓடுனோம்..
மனசுக்குள்ள 'நமக்குன்னு வந்து சேருதுங்களே'ன்னு நெனச்சாலும் வழியில, அப்றம் உள்ளே வாசப்படியில 'ஹலோ .. வெல்கம்'னு சொல்லி வெறுப்பேத்னாங்க விமான ஊழியைத் தங்கச்சிங்க . உள்ள கால வச்சி... பெல்ட்ட போட்டோடனேயே வண்டி நவுர ஆரம்பிச்சிடுச்சி. உடனேதான் சட்டுன்னு ஞாபகம் வந்து மூச்சு விட ஆரம்பிச்சோம். யப்பா... செம அனுபவம். வெளீல சொல்லாதீங்க..இந்த லட்சணத்துல ’சும்மா வெல விசாரிக்கலாம் வா’ன்னு அண்ணன ரோலக்ஸ் கடைக்குக் கூப்பிட்டேன்.. மறுத்துட்டாரு.
முடிந்தால் இந்த நூலை வாங்கிப்படியுங்கள் |
18.12.19- அதிசயங்களின் இன்னொரு பெயர் - ஆங்கர் வாட்..
எங்கள் சொந்த ஊரான ’ஆக்கூர் (மயிலாடுதுறை) முதல் ஆங்கர் வாட் வரை’ன்னு கூட நீங்க தலைப்பு வச்சிக்கலாம் !
சாம்சங் போன் & ஐபோன் - இதில் எடுக்கும் படங்கள் பற்றி எனக்கும் என் அண்ணனுக்கும் கருத்து வேறுபாடு வந்தது.. அவர்து ஐபோன் 8 .. (பேச, படம் எடுக்க ) ஆனால் சாம்ஸங் மாதிரி படம் பளிச்னு எதிலும் வராது என்பவர்..என்து 5S- தரமாக படம் எடுக்க மட்டும் வைத்துள்ளேன். ஐஃபோன் படத்துக்கிட்ட எதுவும் வராது. கனியிருப்பக் காய் கவருவது நல்லதா என்றேன்.. இது பற்றி எங்கள் குடும்ப நண்பர் பாலாஜி சிங்கப்பூரில் கம்போடியா போகுமுன் சொன்னது.. "சாம்ஸங்கா.. ? படம் எடுத்தா மைதா மாவு மாதிரி வருமே , அதுவா மாமா?" என்றார்.. ஆகா..நமக்கு சப்போட் பண்ண ஆள் இருக்கார்ங்ற திருப்தி.. அண்ணன் விமானத்தில் ஏறின உடன் மறுபடியும் ஆரம்பிச்சார்.. சாம்ஸங் பச்ச - பளீர் - தெளிவுன்னு... அவரப் புரிய வக்கிறது கஷ்டம்னு உட்டுட்டேன்.. மூணு மணி நேரத்தில் வந்து சேர்ந்தோம் கம்போடியா.
சியாம் ரீப் இண்டெர்நேஷனல் ஏர்போர்ட் (சியாம் - தாய்லாந்து, ரீப் - reap- வெற்றி - தாய்லாந்தைப் போரில் வென்றதால் அந்தப் பெயராம்- நாமளா இருந்தா அதுக்கு ’சியாம்கொண்டான்’னு பேர் வச்சி அண்ணாதுரை செலய வச்சி அதுக்கும் கீழே வெத்தலப்பாக்கு எச்சி துப்பி... சரி வேணாம் உடுங்க) ஹோட்டலுக்கு டுக்டுக் என்னும் வாகனத்தில் (சைக்கள் ரிக்ஷாவின் சீட்களை மட்டும் டூவீலரில் இணைந்த வண்டி) போனோம். எங்கள் விமானத்தில் வந்த 2 பெண் பயணிகளும் கூட அந்த டுக்டுக் வண்டியில் வந்தனர்.. என்ன தட்றத்கு அவங்கள்ட்ட ஆரம்பிச்சார் அண்ணன் .. அதுல ஒரு அம்மா (சிங்.ல் தமிழ் டீச்சராம்) " ஐயய்யோ பளிச் படம்னா சாம்ஸங்தான்" னுச்சா.. எங்கண்ணன கைல புடிக்க முடீல. .. ஆட்டம் போட ஆரம்பிச்சார்.. உட்டுட்டேன்..
![]() |
10 நாட்களுள் ஏதேனும் 3 நாட்களுக்கு மட்டும் |
மறுநாள் காலை மூன்று நாள் நுழைவுக்கட்டணமாக (எல்லா வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கும் சேர்த்து) தலைக்கு 62 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்தி ஒவ்வொருத்தரின் படம் போட்ட டிக்கெட் பெற்று சிறிது தூரத்திலேயே இருந்த உலக அதிசயங்களுள் ஒன்றான அங்கர் வாட் கோயில் போனோம்...
![]() |
அகழி - வெண்மை நிறப்பாலம் இரப்பர் அமைப்பில் மிதக்கிறது |
அதிகாலை 4.30 க்கு சூரிய உதயத்தில் கோயிலின் நிழல் முன்னேயுள்ள குளம் என்ற பெயரில் குட்டை அளவு தண்ணீரில் நன்கு தெரிவது ரம்யம் என்ற செவி வழிச் செய்தியைக் கேட்டு விட்டு டிபனை கையில் எடுத்துக் கொண்டு அரக்க பரக்க கும்மிருட்டில் மொபைல் வெளிச்சத்தில் (இயற்கையை சிதைக்காமல் இருக்க மின்னொளி போடவில்லை) ஓடிப் பார்த்தால் குட்டைய சுத்தி 200 பேர் எங்களுக்கு முன்னாலேயே வந்து நின்று கொண்டிருந்தனர்.. கும்மிருட்டில் இவ்ளோ பேர் வெளிநாட்லேர்ந்து வராங்கனா ஏதோ இருக்கும் போலன்ட்டு வேடிக்கை பாக்க ஆரம்பிச்சோம். கசமுசா சத்தம் நேரம் ஆக ஆகக் குறைந்தது.. சிறிது நேரத்திலேயே .. ஒரு 700 பேர் 700+ ஒளிப்பதிவுக் கருவியோட முண்டியடிச்சிக்கிட்டு ரெடியானார்கள்... மார்கழி மாசம் இழுத்துப் போத்திக்கிட்டு தூங்கற சுகத்த உட்டுட்டு இப்படி குட்ட பக்கத்துல குண்டக்க மண்டக்கன்னு கூட்டமா நிக்க வச்சுட்டாளேன்னு பொலம்ப உடாம காரிருள் மறையத் துவங்கிய உடன் அந்த மெல்லிய ஒளியில் செயவர்மன் கலைநயம் தெரியத் துவங்கியது. (அவனுக்கு செயல்வர்மன்னு பெயர் வச்சிருக்கலாம் !) கோபுர நிழல்கள் சில்அவுட்டில் (Silhoutte) தெரிய அதன் பிம்பம் குட்டைத் தண்ணீரில் தெரிய.. தமிழனின் திறமைகளுக்கு அளவு என்று எதுவுமில்லை என்று மீண்டும் உரைத்தது போல் இருந்தது. (அப்போது யாராவது என் சட்டையைக் கழட்டிக்கொண்டு போனாலும் உணர்ந்திருக்க மாட்டேன்- அத்தனை ரம்யம்). உலகின் எல்லா தயாரிப்பு போன்களும் கேமராக்களும் அக்காட்சியைக் கவ்வித் தம் பிறவிப் பயனை அடைந்தன. ஸ்டீவ் ஜாப்ஸ் புண்ணியத்தில் பாதிபேர் ஃபேஸ்புக்கில் அங்கிருந்தே லைவ் அப் டேட் தந்தனர்.. கைடுகள் சிலருக்காக விளக்கியதை அருகிருந்த பலர் ஒட்டுக்கேட்டபடி நின்றனர். அதிசயம் என்னான்னா அங்கே டீ, காபி, முரேக், பீடி, சிகரெட் விக்கவில்லை யாரும் அங்கே. வித்தாலும் வாங்கியிருக்க மாட்டார்கள்.
ஒன்றரை மணி நேரம் நின்னது ஒர்த்துன்னு ஒடனே புரிஞ்சிடுச்சி எனக்கு. நிதானமாக DSLR, ஐஃபோன் & மைதா ஃபோன்களில் கிளிக்கிட்டு அங்கேயே கட்டுசோற (வாழப் பழமும் பிரட்டும்) சாப்பிட்டு ரூமுக்கு திரும்பிட்டோம். ரிலாக்ஸாகி விட்டு மீண்டும் அங்கர் வாட்டுக்குப் படையெடுத்தோம்.. ஒரு கைடை (தலைக்கு 10 டாலர்) அமர்த்திக் கொண்டு போனோம்.. விஷ்ணு கோயிலாம் அது. புத்தராக மாற்ற முயற்சி செய்துள்ளனர் இடைச் செருகர்கள். லெட்சுமியின் தலையை எடுத்த சிலையை (அழிச்சிட்டாங்களாமா) இன்றும் வழிபடுகின்றனர் மக்கள். அழகாக பட்டுப்புடைவை உடுத்தி (முன்னால் சிகரெட் கூட வைத்துப் படைத்து ). மிக உயர விஷ்ணு சிலை - எங்க நீ வராமலே செத்துப் போய்விடுவியோன்னு நினைச்சேன்னு நம்மைப் பார்த்து சொல்வது போல் நின்றார். வழக்கம்போல கீழே புத்த பிக்குகள் போல உடையணிந்த இன்ஸ்டண்ட் அர்ச்சகர்கள் ஊதுவத்தி காட்டி சில்லறை பார்த்துகொண்டிருந்தனர். ஒரு நீண்ட பாதையில் நடந்தபின் மெயின் கோயிலை அடைந்தோம்.
நான்கு புறமும் உள்ள மிக நீஈஈஈண்ட பிரகாரத்தின் சுவர் முழுதும் ராமாயண, மகாபாரதக் கதையை கற்களில் செதுக்கி வைத்தது சிறப்பு...எங்கும் இடைவெளியில்லாமல் மிக நீண்ட தூரம் கதை கோர்வையாக வருகிறது - சிலைகளாக. கைடு நம் புராணக் கதைகளைப் பிச்சி உதறுகிறார். இந்தியன்தான நீ? எங்க, ராமரின் பத்து அவதாரப் பேரையும் சொல்லுன்னு என் புராண அறிவைச் சோதித்தார். டூரிசம் படிப்பில் இதெல்லாம் கட்டாயமாம் அங்கே. ’நான் அதற்கும் மேல் இந்தி திரைப்படங்களைப் பார்த்து நிறையக் கற்றுக் கொண்டேன்’ என்றார் கைடு ( சினிமாவப் பாத்தா நல்ல ட்ரஸ எப்படிக் கிழிச்சிட்டு போட்டுக்கறதுன்னுதான கத்துக்கணும்?)
மூன்றடுக்கில் கோயில். ஒவ்வொரு தளத்திலும் லைப்ரரி, குளம், வழிபாட்டு இடம், ஆண் பெண் இருபாலக்கும் தனித்தனியே மிக நேர்த்தியாகக் கட்டி அவ்வளவு பெரிய கோவிலைச் சுற்றி (அளவை நீங்களே கண்டறிந்து வியந்து கொள்க) 800 வருடத்திற்கும் முன் கட்டிய அகழியில் இன்றும் தண்ணீர் நிற்க வைத்ததுதான் சிறப்பு. மூன்றாவது தளம் மன்னர்கள் வழிபடவாம்...
அங்கு நின்று, அமர்ந்து, படுத்து படம் எடுத்தேன்.. ஒரு
கட்டத்தில் பொறி தட்டி ஒரு காட்சியை ஒரே ஆங்கிளில் இருந்து ஐபோனிலும் மைதாவிலும் எடுத்து என் சகோ.விடம் காட்ட இன்ஸ்டன்ட் ஞானம் வந்து என்னைப் பாராட்டித் தள்ளி விட்டார். மைதாவின் மோகம் தீர்ந்து ஐஃபோன் பெரும் யோகம் என்று உணர்ந்து கூறினார். தமிழனின் கட்டடக்கலையை அங்குலம் அங்குலமாகப் பார்க்க முடிந்தது. மூன்றாவது தளம் ஏறும் போது லேசாக மூச்சு முட்டியது.. அண்ணன் என்னிடம் "நம்ம உடம்பையே தூக்கிட்டு இங்க ஏற முடிலயே நமக்கு?... அத்தனை டன் எடையுள்ள கற்களை கச்சிதமாக அறுத்து எப்படித் தூக்கி வந்து நட்டிருப்பான்னு யோசி" என்று கேட்டார். இவுருக்கு ஐஐடியில அந்தக் காலத்துலயே சிவில் இஞ்சினீரிங் சீட் குடுத்தது சரிதான்னு நெனைக்க வச்சார்.
அப்சரஸ் எனும் அமைப்பு இந்தக் கோயிலைப் பராமரித்து புனரமைத்து வருகின்றனர்..
இங்கு பாராட்ட வேண்டிய பல அம்சங்கள் உள்ளன. எங்குமே 'அனிதா ஐ லவ் யூ' என்று ஆணியால் எழுதிய குட்டிச்சுவர்ச் செய்திகள் எதையும் காண முடியவில்லை.
குப்பை, வெத்தலப் பாக்கு எச்சி இல்லை. எல்லோருமே மிகவும் கண்ணியமாகப், பணிவாக சேவையாற்றுகின்றனர். படம் எடுத்தால் நின்று பொறுமை காத்து வழி விடுகின்றனர்.
ராமாயண, மகாபாரதக் கதைகளை கம்போடிய கைடுகள் கற்றுக் கொண்டு ஆங்கிலத்தில் பரப்பி வருவது பாராட்டுக்குரியது. போட்டோகிராஃபியில் வழக்கமான சதுர, செவ்வக வடிவ ஃப்ரேம் இல்லாமல் இயற்கையாக உள்ள எல்லைகளை மெயின் சப்ஜக்ட் சுற்றி வைப்பது நேச்சுரல் பிரேமிங் என்பர் (Natural framing) .. (கூகுள் செய்க).. அம்சமான பல நூறு நேச்சுரல் ஃபிரேம்களை கொட்டிக் கொட்டிக் கட்டிய கோயில் இது. தஞ்சாவூர்க் கோயில்போல இண்டர்லாக் முறையில் கட்டப்பட்ட கோயில் இது.
ஆக, இதுவரை அங்கர் வாட் பார்க்கவில்லை என்றால் உங்களுக்கு மூட்டுவலி வந்து முடங்கிப் போகுமுன் போய்விட்டு வரத் திட்டமிடுங்கள். உங்கள் கம்பெனி எல் டீ ஸி பணம் தரலைன்னாலும் பரவாயில்லை. கைக்காசப் போட்டாவது போய்ட்டு வந்துருங்க...